காதல்

உன்னைப் பார்த்து
நாட்கள் நூறானதாலே
உனக்கொரு கடிதம்
எழுதிட எண்ணி
காகிதத்தில் என்
எழுதுகோல் கிறுக்க
தொடங்க,எழுதிய
வரிகளோ என்
மனதிற்கு ஒப்பாமல் போக
காகிதங்கள் குப்பையாக
இறுதியில் மை இல்லமால்
போனது பேனாவும்
இப்படி என் எண்ணமெல்லாம்
உன்னையே நாடி இருக்க
ஒரு 'டெலிபதி போல்'
உன்னையே நினைத்து
காகிதத்தின் மேல்
ஆழ்ந்த சிந்தனையில்
மூடிய என் கண்கள்
சற்றென்று திறந்து கொள்ள
நான் காண்பது கனவா
நெனவா, பேசும் சித்திரமாய்
நீ நின்று கொண்டிருக்கின்றாய்

போதும் போதும் உனக்கு
இனி நான் எதற்கு
கடிதம் எழுதிட வேண்டும்
என் மானசீக கடிதத்திற்கு ?
பதிலாய் நீயே வந்துவிட்டப்பின்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (5-Jun-18, 5:46 am)
Tanglish : kaadhal
பார்வை : 164

மேலே