அவளைக் காணும்வரை

அய்யோ யென்று
கத்த வேண்டும் போல்
இருந்தது!
சூழ்நிலை கருதி
குமுறலை உள்ளடக்கி
அருகே இருந்த தூண்மீது
சாய்ந்து நிற்கிறேன்!
அவ்விடத்தை விட்டு அகல
மனமில்லாது
வழித்தடத்தை வெறித்து
பார்க்கிறேன்!
இயக்கத்திலே உள்ளன
என்னைச் சுற்றியிருந்த
யாவும்!என்னைத் தவிர!
கொஞ்சம் முன்னமே
விழித்து இருந்திருக்கலாம்
சீக்கிரமே அம்மா டிபனை
எடுத்து வைத்திருந்திருக்கலாம்
நானும்கூட வேகமாய்
வந்திருக்கலாம்!ஏன்
அவள் கூட என் வருகைக்காக
சிறிது நேரம்
காத்திருந்திருக்கலாம்!
எவ்வாறு என் மனதிற்கு
ஆறுதல் சொல்லி இன்றைய
பொழுதை நகர்த்துவேன்
மாலை அவளைக்
காணும் வரை!

எழுதியவர் : பெ.பரிதி காமராஜ் (5-Jun-18, 6:27 am)
Tanglish : avalaik kaanumvarai
பார்வை : 505

மேலே