ஒரு காதலியின் புலம்பல்…
கலிவிருத்தம்....
எண்ணமும் நடையும் இயல்பின் திரிந்தன
வண்ணமும் உலகில் மாறித் தெரிந்தது
உண்ண நினைக்கினும் உணவு வெறுத்தது
கண்திறந் திருந்தன கனவுகள் தொடர்ந்தன
வந்துபோ கின்றவர் வடிவுகள் கண்டிலேன்
நொந்திடப் பிரிந்தவர் நூறாய் எதிரினில்
செந்தமிழ்ப் பாட்டையும் சிந்தை தவிர்த்தது;
இந்தவொரு நிலையுமே இன்னுமே தொடரவோ?
====+++++=====