கீதையின் பாதை

எல்லாப் பற்றையும்
விட்டுவிடு,
என்னைச் சரணாய்ப்
பெற்றுவிடு,
உன்னைப் பற்றிய
கவலைவிடு-
கீதாசிரியன் ஓதிய
வேதமிது..

கற்றுக்கொடுத்தது
கண்ணபிரான்,
பெற்றுக்கொண்டது
வில் விஜயன்..

கீதை பிறந்தது
போர்க்களத்தில்,
அது
பாதுகாக்கிறது
பாரோர் வாழ்வை,
அது
போர்க்களம் ஆகிவிடாமல்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (5-Jun-18, 6:51 am)
பார்வை : 104

மேலே