நான் அமர்ந்திருக்கிறேன்

கால் மூட்டுகளின்
மேலிருக்கும்
கைகளின்மேல்
தலைபொதிந்து

நான்
அமர்ந்திருக்கிறேன்!

கன்னம்
தாடை
கைகளை நனைத்து
தரையில் சொட்டிக்கொண்டு
கண்ணீர்!

நான் அமர்ந்திருக்கிறேன்!

மனதிலிருந்து
மட்டுமல்ல என்
நினைவுகளில் இருந்தும்
உன்னை அகற்றிட
மனமில்லாது விம்மிக்கொண்டு

நான் அமர்ந்திருக்கிறேன்!

உன் முகம்
உணர்வுகளை சுண்டி
யெழுப்பும் கண்கள்
உன் ஸ்பரிசம்
அணைப்பின் இதம்
ஏதுமில்லா கையறுநிலையில்

நான் அமர்ந்திருக்கிறேன்!

இனி
மூச்செதற்கு?
உணவெதற்கு?
உயிரெதற்கு -உன்
கைகள் தீண்டா
உடலெதற்கு?

கண்களில் நீர் கசிய
நான் அமர்ந்திருக்கிறேன்!

நீரில்லாப் பயிராய்
நீயில்லா வாழ்வு
எனக்கு!
நீ தந்த இதழ்
முத்தத்தை நாவால்
ருசித்து
என் இறுதி மூச்சை விட
விஷமருந்தி

நான் அமர்ந்திருக்கிறேன்!

எழுதியவர் : பெ.பரிதி காமராஜ் (6-Jun-18, 3:14 pm)
பார்வை : 125

மேலே