யாவும் நீயே என் காதலே

-------------------------------------------

வீராப்பாக உரைத்து வந்தேன்
வீரமாக வசனமும் பேசினேன்
வீணடிக்கும் வேலையது என்று
விருப்பமிலா காதலை நானும் ...

விழிகளில் விழுந்தவள் அவளை
வழிந்திடும் முகமுடன் நோக்கியதும்
வழியறியா தவிக்கும் நெஞ்சமுடன்
விழுந்தேன் மயங்கியே அவளழகில் ....

விலக்கி வைத்தேன் கொள்கையை
வீழ்ந்தேன் காதலில் அந்நொடியே
விரைந்து அளித்தேன் விண்ணப்பம்
விளங்கவும் செய்தேன் விருப்பத்தை ...

வியப்பில் அதிர்ந்தவள் சிலையாகி
விழைவை மறுக்காத நிலையாகி
விந்தையை அறிந்த விழியழகி
விழிவழியே கூறினாள் சம்மதம் ...

வளைந்தேன் நெளிந்தேன் கரைந்தேன்
வரிசையாய் வருகின்ற வார்த்தைகளும்
வந்திடவும் தயங்கியதால் இயம்பினேன்
யாவும் நீயே என் காதலே என்று ....!

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (6-Jun-18, 3:25 pm)
பார்வை : 744
மேலே