காதல் தீ

உன்னைக் காணாமல்
தவித்து போனேனடி -என்னவளே,
காதல் சுரம் கண்டு - விரக
தாபத்தால் உடலெல்லாம்
அனலாய் கொதித்ததடி ,
தனிமையும் வாட்டிட,
உயிர்ப்போய்விடுமோ என்று
நினைத்திருக்க, மேகத்தைக்
கிழித்து வந்த வெண்ணிலவாய்
உன் முகம் தெரிந்தது என் முன்னே,
அருகில் வந்து ஆதரவாய்
உன் மலரிதழ் கை விரல்கள்
என் நெஞ்சில் பதித்திட
நீரால் அணைந்த தீயானது
என் உள்ளம், தனிமைத்தீ அணைய
குளிர்ந்தது..............
உள்ளத்தின் காய்ச்சல் போனது
உந்தன் ஸ்பரிசத்தில் நான் இப்போது,
உந்தன் பூரண அரவணைப்பில்
இப்போது இருவரையும் சேர்த்தது
காதல் தீயே ...............!
கொதித்ததும்,குளிர்ந்தும்
குளிர்ந்ததும், கொதிக்கும்
காதல் தீயே.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (6-Jun-18, 4:34 pm)
Tanglish : kaadhal thee
பார்வை : 285

மேலே