மழை பொழியும் போது

மழைப் பொழியும் போது

உன்
காது வளையங்களில்
இருந்து சொட்டிய
மழைத்துளியையும்

உன்
கால்களை நனைத்து
மோட்சம் அடைந்த
நீர்த் திவலைகளையையும்

என்னை ஈரமாக்கி
உன்னை காத்த அந்த
ஏழு வண்ண
வானவில் குடையையும்

நனைந்து கொண்டே
நீ முன் செல்ல
நானுன் பின்னால் வர
என் காதலையுன் காதோரமாய்
சொல்லத் தெரியாது மழை
ஓலமிட்டதையும்

நான் விட்டு
உன் கைகளை
வந்து சேராது
நடுவழியே
மூழ்கிப்போன
காகித கப்பலையும்

ஓடுகளில் வழிந்த
நீரை உள்ளங்கைகளால்
தொட்டு விளையாடியதை
ஓவியமாய் வரைய
நினைத்ததையும்

என் வீட்டு வாசலில் நின்று
மழை தூவ தூவ
கல்யாண கோலத்தில்
உன்னைக் கண்டதையும்

உன்னிடம் கூறாது
என் மனதிற்குள்ளேயே
வாசம் செய்யும்
ஒருதலைக் காதலையும்

நினைவு படுத்திக்
கொண்டே இருக்கிறது!

எழுதியவர் : பெ.பரிதி காமராஜ் (7-Jun-18, 5:16 pm)
பார்வை : 328

மேலே