நிறங்கள்

மலர்கள்
பல நிறம்
மனிதர்கள்
இரு நிறம்.
+
உயிர்த்துளி நீர்
பருகும் நீர்
ஒரே நிறம்
வெண்மை.
+
ஏழு நிறங்களுக்கு
சண்டையில்லை
இரு நிறங்களுக்குள் தான்
எப்போதும்
பிணக்கு... கலகம்...?

எழுதியவர் : ந க துறைவன் (8-Jun-18, 10:19 am)
சேர்த்தது : துறைவன்
Tanglish : NIRANGAL
பார்வை : 113

மேலே