எழில் மிகு திருநெல்வேலி

ஒவொரு ஊருக்கும் ஒரு சிறப்பு உண்டு அதில் திருநெல்வேலியும் சளைத்ததில்லை ...
பச்சை பசேலென மரங்கள் வழிமொழிய என்னை அற்புத உலகிற்கு அழைத்து அந்த பாதை
மண் வாசம் மனசை மயக்க ...மெதுவாய் கடந்தது கால்கள் வீதிகளில் ....சில்லென காற்று புதுதெம்பளித்து சென்றது..
வாகன நெரிசல் ஒருபக்கம் மனதை நெருட ....மண்பாதை ஏதோ ஒரு புது உணர்வை அளித்தது ...
வழிமாறி போனால் கூட மனம் அந்த ஊரை விட்டு செல்ல சொல்லாது
அன்பான முகங்கள் அறிவான வார்த்தைகள் ...மனதை தொட்டு செல்லும்
அழகான நம் தமிழ் மொழி மேலும் அழகை தந்தது அவர்கள் பேசியபொழுது ...
திருநெல்வேலிக்கு பெருமை தூது விடும் ஒரு படைப்பு அல்லவா அந்த திருநெல்வேலி அல்வா ...
உண்டு முடித்த போதும் நாக்கில் இனிப்பு சுவை மாறுவதில்லை....
மக்களின் குணங்கள் மட்டுமல்ல அங்குள்ள சடங்குகளும் வித்தியாசமானவை
சடங்குகளில் பரிமாறப்படும் உணவுகளும் அற்புதமானவை...
தாமிரபரணி ஆற்றின் பெருமை பாரெங்கும் பேசப்படும் ..
குற்றாலமும் பாபநாசமும் மனதில் நிம்மதி கொடுத்துவிடும்
கண்களுக்கு மனதிற்கும் நாவிற்கும் மட்டுமல்ல,
நெல்லையில் நெல்லையப்பரின் தூண்கள் செவிக்கு விருந்தாகும்..
வார்த்தைகளுக்குள் அடக்க முடியவில்லை அங்குள்ள வளங்கள்..
ஐம்புலன்களையும் மகிழ வைத்துவிடக்கூடும் இந்த அழகான சிறு உலகம் ....

எழுதியவர் : பிரியங்கா நா (8-Jun-18, 12:18 pm)
சேர்த்தது : priyanga
பார்வை : 1402

மேலே