அழிவும்,படைப்பும்

உலகில் நாம் காணும்
இயற்கைகாட்சிகள்
ஒவ்வொன்றும் அழகே
நீல வானம்,சூரிய,சந்திரர்
மின்னும் தாரகைகள்
கடல்கள், சமுத்திரங்கள்
செடிகள்,கொடிகள்
மாமரங்கள், கானகம்
மாமலைகள்,நதிகள்
அருவிகள் என விந்தைத்தரும்
அத்தனையும் ...................

அழிகின்றன ஒவ்வொன்றும்
அழிக்கப்படுகின்றன-சூறாவளியால்
பெரும் மழையால், வெள்ளத்தால்
பொங்கிவரும் கடல் அலைகளால்
நில நடுக்கத்தால்,எரிமலைகள்
சீற்றத்தால், மலையில் மண் சரிவால்
மக்கள் தொடுக்கும் போரால்
மக்களே மக்களை மாய்துகொள்வதால்
மதவெறியால் , பூசலால் , விவரம்
புரியா வந்து தாக்கும் நோய்கள்
இப்படி அழிவுகள் மறுபுறம் .............

இயற்கை எழிலில் மகிழ்ந்தேன்
ஆனால் இயற்கை தண்டிக்கும் அழிவில்
தடுக்கமுடியா அந்த பேரழிவில்,
உயிரினங்கள் அழிவு,கூக்குரல்.
அப்பப்பா ............. மனதை
நிலைகுலைக்க , ஒன்றும் புரியாமல்
நான்.............

ஏன் படைத்தான், ஏன் அழிக்கிறான்
அலகிலா இவ்விளையாட்டு அவனுக்கு
ஆனந்தம் தருமா ...........நான் நம்பவில்லை
பின் படைக்கப் பட்ட இவை எல்லாம்,
இந்த 'நான்' ...............யாவை, யார்
இறைவா இதற்கொரு பதில் தருவாயா
பதிலுக்கு காத்திருக்கும் நான்.......

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (9-Jun-18, 1:09 pm)
பார்வை : 94

மேலே