பிரிவின் வலி
என் அன்பு தோழியே தேகம் மட்டும் கிடக்கிறது
இங்கே...
உயிரும் நினைவுகளும் உன்னை
மட்டுமே சுற்றி திரிகிறது
என்றோ நாம் பேசிய
எண்ணில் அடங்கா வார்த்தைகளும்
கூட இன்று யாரோ சொல்ல கேட்க
என்னை அறியாமலே மறந்து போகிறேன்...
உன்னை அல்ல என்னை...
அந்த நேரங்களை விரல் விட்டு எண்ணிட முடியாது..
அத்தனை குழப்பங்கள் என்னுள்...
மறக்க முடியாத வலிகளை தந்தவள் நீ.....
நான்
நூறுமுறை இறந்தாலும் கூட கிடைக்காது
இப்படி ஒரு நரகம்...
உன் பிரிவை எண்ணி எண்ணி
நான் செத்து செத்து பிழைக்கின்ற
காரணத்தால்..
சில நேரம் மட்டும் அல்ல
எல்லா நேரங்களிலும்
உன் நினைவுகளில் மட்டுமே
மூழ்கி கிடக்கிறேன்..
நீந்த தெரிந்தும் நீந்தி வர தான்
மனம் இல்லை
எனக்கும்..
உன் நினைவுகளோடு நான் மூழ்கி விட்ட காரணத்தினால்
ஆதலால் தானோ என்னவோ என் கண்ணீர் துளிகளை
கூட அதிகமாக நேசிக்கிறேன்..
விழியோரமாய் உன் நினைவுகல் அலையாய் அடிப்பதினால்...