உண்மைகள்

நினைவில் வந்த தோற்றம்,
மனதில் நிற்கும் ஏக்கம்,
கனவில் வருவதோ மாயம்,
நனவில் நிற்பதோ தயக்கம்.
உண்மைக்கு உறவுகள் உண்டா?
உறவுகளுக்குத் தான் உண்மை தெரிவது உண்டா?
தடம் மாறி, நிறம் மாறி நிற்பாரிடையே,
குணம் தேடி, மனம் தேடுதல் சரியாகுமா?
காசும், பணமும் பெரிதென்றும்,
நடப்பதெல்லாம் என்னால் என்றும்,
கர்வம் கொள்ளுதல்,
கர்மம் தொலைக்க,
காலமெல்லாம் காத்திருப்பார் செயல்.
இருண்டதும், அரண்டதும்,
கண் காணும் மட்டே,
காலம் கடக்க ,
காட்சிகள் மாறும்.
காரியங்கள் முடிய,
கருத்துக்கள் வேறாகும்.
கவலைகள் நிலைப்பவையல்ல,
நினைப்பவையே கவலைகள்.
நிலையானது ஏதுமில்லை,
நிம்மதிக்கு பொறுமையே தலை வாசல்.
வாழ்க்கைப் பாதையிலே,
வரவும், செலவும்,
வழிகாட்டும் திசை காட்டி.
வரம்புக்குள் இருத்தலே
உயர்த்தி வைக்கும் முதல் சாட்சி.