கருத்தவளே

கருத்த நிறத்தவளே
என்னை
வறுக்க பிறந்தவளே

உன் குறும்பு சிரிப்பில் மட்டும்
திங்களுக்கு கண் கூசும்
உன் அழகு இடையில் மட்டும்
காதல் வெண்மை வீசும்

வெளுக்காத உன் நிறமும்
வழுக்காத உன் மேனியும்
பழுக்காத என் கண்களில்
குளிர் நீராய் பாயும்

உன் முகப் பருக்களில் மூத்தவனாய்
உன் முகம் பற்றி அதில் நீராகாமல்
நீயுள்ள வரையில் பிறர் கண்
படாமல் பார்த்துக் கொள்வேன்

உன் கூந்தல் பற்றிடும் முதல் நரை
நரைப்பதற்குள் வீடுதோரும் தொட்டில்கள்
நிறைக்கச் செய்வேன் அதில் முதல்
கருவாச்சியாய் உன்னை தாலாட்டுவேன்

கருங்கூர் முற்களை உடைத்தெடுத்து
நூலின் பாய்க்களுள் சுருட்டி வைத்து
தலையில் துண்டு சுற்ற
இடையில் முந்தானை சுற்ற
முகத்தில் இருந்து விழுந்த முதல்
வியர்வையில் முளைத்த ரசிகன் நான்

கருமை செழிக்கும் தமிழ் ஆழியில் நீராடி
வார்த்தைகளான முத்துக்கள் பறித்து
கவி அணி சூட்டுவேன் கழுத்தில்

என் கரியவளை அழகூட்ட தினம் ஒன்று
போதாது

எழுதியவர் : மேக்சின் (10-Jun-18, 5:39 pm)
சேர்த்தது : Maxin
பார்வை : 123

மேலே