காதல் ஹைக்கூ கவிஞர் இரா இரவி

காதல் ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

கவிதை வழங்கிடும்
அட்சயப்பாத்திரம்
அவள் முகம் !

நீரின்றி
வாழ்கின்றன மீன்கள்
அவள் விழிகள் !

ஆயிரம் பேரிலும்
தெரிவாள் தனித்து
ஆயிரத்தில் ஒருத்தி !

மறந்தது பசி
பிறந்தது மகழ்ச்சி
அவள் வருகை !

தோற்றது
காந்த விசை
அவள் விழிகளிடம் !

நாள் முழுவதும்
ரசிக்கலாம்
நடனமிடும் விழிகள் !

தேவையில்லை வண்ணம்
இயற்கையில் சிவப்பு
அவள் இதழ்கள் !

அகம் வைத்ததால்
அறியவில்லை அகவை
அழகி அவ்வளவுதான் !

அழகாகின்றது
எந்த ஆடையும்
அவள் அணிந்ததும் !

அவளின் அளவிற்கு
வேறு யாருக்கும் இல்லை
குரல் இனிமை !

வனப்பில்
தோற்றது வண்ணத்துப்பூச்சி
என்னவளிடம் !

அழகிகளும் பொறாமை
கொள்ளும் அழகு
என்னவள் !


நடந்துவரும் நந்தவனம்
சுண்டிஇழுக்கும் சோலைவனம்
என்னவள் !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (12-Jun-18, 6:56 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 182

மேலே