அயல்நாட்டில் தமிழ்

ஒன்றுக்குள் ஓன்று
உறவுகள்
பக்கம் பக்கமாய்
பாசங்கள்
என்னே மகிழ்ச்சி
நெகிழ்ச்சி
ஒவ்வொரு சொந்தமும்
நெருக்கம்
இதுவன்றோ சொர்க்கம்
ஆரவாரம் அன்று ,
ஆனால்.....
இன்று எங்கே காணோம்
உறவுகள்
சொந்தம் பந்தம்
தேடுகின்றனர்
யாரைப் பார்ப்பது
கேட்பது
அந்த மகிழ்ச்சி அன்பு
எங்கே
அனாதைகள் போல்
தவிப்பு
ஒவ்வொரு மனமும்
விரக்தி
இது முறையா/
ஏன் என்று கேட்க இயலாது
கருணை எங்கே /
தமிழன் கலங்கி தமிழ் கசங்கி
நின்ற நேரம் அது ,
மீண்டும் மலருமா
தமிழ் மக்களின் மனங்கள்

எழுதியவர் : பாத்திமாமலர் (13-Jun-18, 10:14 pm)
பார்வை : 743

மேலே