கடவுள் வாழ்த்து - விநாயகர் வெண்பாத் திரட்டு

நேரிசை வெண்பாக்கள்

சோழவந்தான் ஊரின் சிதம்பரவி நாயகனே
வேழமுனை வேண்டுகிறேன்; நூறுடனே - ஏழுமொன்றும்
வெண்பாக்கள் செய்திடவே வேண்டும் வரமருளி
எண்ணம் நிறைவேற்(று) இனிது! 1 *

சோழவந்தான் ஊரின் சிதம்பரவி நாயகன்
வாழவந்த மக்கள் வளமுடன் - வாழவே
அன்புடனே ஆதரித்(து) எந்நாளும் காத்திடுவான்;
இன்பமே என்றும் எனக்கு! 2 *

கருணை வழிகின்ற காருண்ய மூர்த்தி
அருமை விநாயகனாம் அண்ணல் - திருவாக
சோழவந்தான் ஊரின் சிதம்பரவி நாயகன்
வாழவைப்பான் என்றும் வணங்கு! 3 *

விநாயகனைத் தொழுக - வெளி விருத்தம்

தொழுக தொழுக விநாயகனைத் தொழுக - எந்நாளும்
போற்றி போற்றி விநாயகன் போற்றி - எந்நாளும்
விநாயகனைத் தொழுக விநாயகனைத் தொழுக - எந்நாளும்
தேற்ற(ம்) உண்டு தேற்ற(ம்) உண்டு - எந்நாளும் .

ஆசான் புலவர் குருநாதன் போற்று – நேரிசை வெண்பா

மேல்நிலைப் பள்ளியில் சோழவந்தா(ன்) ஊரினில்
ஆல்போல நாங்கள் தழைத்திடவே - மால்போல்
இலக்கணம் வித்திட்ட இன்தமிழ் ஆசான்
புலவர் குருநாதன் போற்று!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (11-Jun-18, 10:09 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 78

மேலே