தமிழ்த்தாய்
தரணியில் என்னை வாழ வைப்பவள்...
பேச்சாக என் நாவில் ஒலியைத் தருபவள்...
நான் கற்க வேண்டுமென மொழி வடிவமானவள்...
அவள் புகழ் நான் பரப்ப எனது மூச்சோடு கலந்தவள்...
அறிவு என்னும் கடலில் நீந்தத் தாய்மையோடு சொல்லிக் கொடுத்தவள்...
கேள்விக்கனைகளை சமாளிக்க பயிற்சி கொடுத்தவள்...
உள்ளத்தின் எண்ணங்களுக்கு சொற்களை வழங்கி சிறப்பிக்கச் செய்பவள்...
அனைவருக்கும் புத்திசொல்லும் மதி நிறைந்தவள்...
ஞானத்தை போதிக்கும் அனுபவம் பெற்றவள்...
படைப்புகளால் பெருகி உலகை ஆள்பவள்...
உண்மைக்கு அருகில் காவலாக இருப்பவள்...
தன்னை விரும்பி வருபவர்களுக்கு விருந்தோம்பல் செய்பவள்...
எல்லா சூழலிலும் அரவணைக்க காத்திருப்பவள்...
பெயரால், வயதால், நடையால், வழக்காடலால் தமிழை நேசிப்போரின் வாழ்க்கையில் அர்த்தமானவள்...