அம்மா

உன்னை பார்த்தவுடன்
என் வாட்ட முகம் மட்டுமல்ல நம் தோட்ட மொட்டுக்களும் மலர்கிறது

உன் தாலாட்டில் என்
கண்கள் மட்டுமல்ல
என் காயங்களும் உறங்குகிறது

உன் விரல்கள் கோதிய
என் தலை மகுடம்
சூட்டிக்கொள்கிறது

உன் அரவணைப்பில்
என் உயிர் வண்ணம் பூசிக்கொள்கிறது

உன் சேலையில் கட்டிய
ஊஞ்சலில் நான்
மீண்டும் உன் கருவறை
புகுகிறேன்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (15-Jun-18, 9:21 am)
Tanglish : amma
பார்வை : 1311

மேலே