அம்ம்ம் மா

அம்ம்ம் .... மா !

நான்உண்ணும்நேரத்தில்
நீசாப்பிடமறந்துஎன்னைரசிக்க
ஈரேழுஜென்மகாலம்உன்மடியினில்தவழ
"அம்மா" மீண்டும் எனை ஈன்றெடுப்பாயா ... ?

ஆயிரம்வார்த்தைகள்நானறிந்தபோதும்
உனைநானழைத்தமுதல்வார்த்தைபோல்
எதுவும்இனிக்கவில்லைஅவ்வார்த்தைக்காக
"அம்மா" மீண்டும் எனை ஈன்றெடுப்பாயா ... ?

நான்கேட்டஇசையில்
உன்தாலாட்டுப்போல்
எதுவும்எனைஈர்க்கவில்லை
"அம்மா" மீண்டும் எனை ஈன்றெடுப்பாயா ... ?

மெத்தைமேல்உறங்கினாலும்
பூக்கள்மீதில்படுத்தபோதும்
உன்மடித்தூக்கம்போலில்லையே
"அம்மா" மீண்டும் எனை ஈன்றெடுப்பாயா ... ?

நான்உன்னைநோக்கித்தவழ்ந்துவரும்நேரத்தில்
எல்லைஇல்லாமகிழ்ச்சிஅடைந்தாய்
அதைமறுமுறைகாணவிழைகிறேன்
"அம்மா" மீண்டும் எனை ஈன்றெடுப்பாயா ... ?

என்கைகள்பிடித்து
எழுதவைக்கும்தருணத்திற்காக
தவறாய்எழுதுகிறேன்
"அம்மா" மீண்டும் எனை ஈன்றெடுப்பாயா ... ?

உயிரற்றக்கல்லைசிற்பமாக்கும்சிற்பியைபோல்
உயிருள்ளஎன்னைசெதுக்கி
வாழ்வறியவளர்த்தநாளெல்லாம்திரும்பப்பெற
"அம்மா" மீண்டும் எனை ஈன்றெடுப்பாயா ... ?

நான்தோற்றுத்துவளும்போதேல்லாம்
நம்பிக்கைஊற்றைஎனக்களிக்கும்
உனக்காகஏங்கித்தவிக்கிறேன்
"அம்மா" மீண்டும் எனை ஈன்றெடுப்பாயா ... ?

நீஅள்ளிஅணைக்கும்தருணத்திற்காக
நிமிடத்திற்கொருமுறை
மீண்டும் மீண்டும் அழ துடிக்கிறேன்
"அம்மா" மீண்டும் எனை ஈன்றெடுப்பாயா ... ?

நான்உண்டஉணவுகளிலே
மிகச்சிறந்ததுஇணையற்றது
உன்தாய்ப்பால்மட்டுமே
"அம்மா" மீண்டும் எனை ஈன்றெடுப்பாயா ... ?

வெளிஉலகைவிட
உன்கருவறைக்குள்
பாதுகாப்பாய்உணர்கிறேன்
"அம்மா" மீண்டும் எனை ஈன்றெடுப்பாயா ... ?

பூமியில் பிறந்த போதும்
கல்லறைசென்றபின்னும்
உன்கருவறைமறக்கவில்லை
"அம்மா" மீண்டும் எனை ஈன்றெடுப்பாயா ... ?

~ ஏக்கத்துடன்உன்மகன் ~

எழுதியவர் : Guru (14-Jun-18, 8:45 pm)
சேர்த்தது : Guru
பார்வை : 83
மேலே