அழகைச் சொல்லவா கண்மணியே

அழகை சொல்லவில்லை என
இதழ் சிணுங்கும் என் செல்ல
தோழியே...
சொல்லவா உன் அழகை நானும்...
முகத்தின் அழகை சொல்லவா..???
அகத்தின் அழகை சொல்லவா...???
வானளவு நேசித்த உன் அகத்தின் அழகை
திருவாய் மொழிகிறேன்...
கேளடி என் கண்மணியே.......
அறிந்தவர்க்கு மட்டுமே
சுவை தரும் பலா கனி நீ....
புரியாதவர்களுக்கு
விளங்க முடியாத கணக்கு
புத்தகம் நீ......
கோபம் கொண்டு பார்க்கையில்
உன் கண்ணின் கடை விழி அழகு..
கொஞ்சும் போது உன் கிளி பேச்சு அழகு...
மழலை கோபம் கொள்ளும் போது
உன் சின்ன இதழ் சிணுங்கல் அழகு...
குழலோசை அழகா...???
உன் குரலோசை அழகா...???
நான் சொல்வேன் உன்
குரலோசை தான் அழகோ அழகு....
செல்ல சண்டைகளுக்கு பின்
சமரசம் செய்யும்
உன் மாய புன்னகை அழகு...
நீண்டு வளைந்த சாலைகளில்
என் விரலோடு விரல் கோர்த்து
நடந்து செல்லும் சிறு பிள்ளைத்தனம்
அழகு....
தேடி தேடி பார்த்தேன் அகராதியில்
வார்த்தைகள் தான் இல்லை மேலும்
உன் அழகை சொல்ல...
போதுமென முற்றுப்புள்ளி வைக்க
தான் நினைக்கிறேன்...
முற்று பெறாமல் தொடர்ந்து கொண்டே
இருக்கிறது உன் அழகு......

~* லீலா லோகிசௌமி *~

எழுதியவர் : லீலா லோகிசௌமி (15-Jun-18, 11:56 am)
சேர்த்தது : லீலா லோகிசௌமி
பார்வை : 271

மேலே