என் உயிரான காதலடி நீ எனக்கு ❤️

டேய் மச்சி இன்னைக்காச்சும் சொல்லுடா எத்தனை நாள் கனவிலயே அவ கூட பேசிட்டு இருப்ப...இன்னைக்கு நேர்ல போய் பேசு டா...எங்ககிட்ட நீ அவ மேல வச்சிருக்க காதல் பத்தி சொன்னதில பாதி அவட்ட சொன்னலே போதுடா...

இல்ல மச்சான் அவ கண்ண பாத்தலே எனக்கு எதுமே பேச வரலடா...அவ முன்னாடி நின்னாலே சிலையாவே நிக்கின்றேன்...

யேய் நிறுத்து...மச்சி இதேயே தானடா டெய்லி சொல்ர...முடியல மச்சான்...இன்னைக்கு போய் பேசுத அவ்வளவு தான்...

நண்பர்கள் புடை சூழ அவள் வரும் வழி மேல் விழி வைத்து காத்திருந்தன அத்துனை கண்களும்...

வந்தாள்... சட்டென மின்னலொளி அடித்தார் போல...காதில் ஹெட் செட் மாட்டிக்கொண்டே பாட்டுக்கு ஏற்றவாறு பாடியும் லைட்டாக ஆடிக்கொண்டே யாரும் பார்க்கிறார்கள் என்பது கூட தெரியவில்லை அந்த குயிலுக்கு...இசையில் 🎵 அவ்வளவு பிரியம் போலும்...

டேய் மச்சான் இப்போ போடா..கூட வேற யாரும் இல்லை...அவ hostelக்கு தான் போறா...சோ எப்படியும் அந்த ரூட்ல ஆளுங்க அதிகமா இருக்காது இதான் சமயம் ஒழுங்கா போய் சொல்லு...

அந்த மதியான உச்சி வெயிலில அவன் சற்று நடுங்கித் தான் போனான்...

மச்சான் நாளைக்கு போறேனே...

ஹேய் இந்த கதையே வேண்டாம்...இப்படி சொல்லி சொல்லியே 3 வருஷம் முடியபோகுது டா...இன்னும் கொஞ்ச நாளில காலேஜே முடிஞ்சிடும்...இப்பவும் சொல்லாட்டி எப்படி டா...இன்னைக்கு நீ சொல்ற்ற அவ்வளவு தான்...

(இந்த பிரெண்ட்ஸ் இருக்காங்கலே காதலை சேர்த்து வைக்கிறதுல அவங்களுக்கு மிஞ்சின ஆளு இல்லீங்க...நண்பன் மேல அவ்வளவு அக்கறை என்னெய்ய சொல்லுதீக...)

சரண்...ஒரு நிமிஷம்...

ஹெட் செட்டை எடுத்துட்டு யார்ரா அது நம்மல கூட்பிட்ரது அதுவும் நெருக்கமான பிரெண்ட் மாதிரி பேர சுருக்கி... (ஹெட் செட் போட்டுருந்தாலும் காது கேட்கத்தானங்க செய்யும்!)அப்படின்னு பாத்தா சரண்யா...

ஓ நீங்களா...சொல்லுங்க பாலா...என்ன விஷயம்...என்றாள் தன் வகுப்பு மாணவன் பாலாவிடம்...

சரண்யா உங்கிட்ட ஒண்ணு சொல்லனும்...உன்ன பாத்த நாளில இருந்து உன்ன எனக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு...என் மனசுக்கு ரொம்பவே நெருக்கமா உன்ன நான் உனர்ந்தேன்...உணர்றேன் இப்பவும்...எப்போவும்.. நீ என்கிட்ட ரெண்டு தடவ தான் பேசிருக்க...அதும் ரொம்ப கம்மியா ஒரு கூடப் படிக்கிறவர்ங்கிற முறையில் ஏதோ கொஞ்சம்... ஆனால் நீ பேசின அந்த சில வார்த்தைகள் தான் என் ஒவ்வொரு பொழுதையும் உன் நினைவுகளை இட்டு நிரப்பி உயிர்ப்புடன் வச்சிட்டுருக்கு...நிரய பேசனும்னு நினைச்சேன்...ஆனா ஒன்னுமே இதுக்கு மேல பேச வரல(!)...உன்னோடு என் ஆயுள் முழுவதும் செலவிட ஆசை...அன்பே என் கரம் சேர்வாயா...

கவிதையாய் அவன் பேசியதை விழி அகலாமல் கேட்ட அவள் சட்டென நினைவுக்கு வந்தவளாய்...

பாலா ஐ அம் ரியலி சாரி...எனக்கு லவ்லாம் பண்ண விருப்பமில்லை...என்னை மன்னிச்சுடுங்க.. please don't mistake me பாலா...எனக் கூறிக் கொண்டே சரண்யா தன் விடுதிக்கு புறப்பட்டாள்...பாலாவும் எதுவும் பேசாமல் சென்று விட்டான்...

ஹேய் என்னடி...இன்னைக்கு மதியம் சாப்பிடக் கூட வரலயாம் சுபா சொன்னா...எங்க போனா...எனக்கு class முடிய லேட் ஆகிட்டுடி...பேசிட்டே இருந்தவள் அப்போ தான் கவனிச்சா...ஆமா ஈவினிங் ஆகிட்டு லைட் கூட போடாம என்ன தான் பண்ணிட்டு இருக்க...அங்கு அமைதியாய் தூங்கி கொண்டிருந்தாள் சரண்யா...

அச்சோ தூங்கின்றா...செரி தூங்கட்டும் நாம அப்புறம் வருவோம் என சொல்லிட்டே கிளம்ப நின்னா சுஜிதா...

பாலா ஐ யம் சாரி...please...

பேந்த பேந்த விழித்து யார்ரா அதுனா...சரண்யா தான் அது...தூக்கத்தில் புலம்பிக் கொண்டிருந்தாள்...

ஹேய் என்னடி ஆச்சு...பாலான்னு புலம்பிட்டு இருக்க...சரண் எந்திருடி...

விழிகள் கலங்கிப்போருந்தது அவள் எழுகையில்...

சரண் ஹேய் என்னமா ஆச்சு...ஏன் உன் முகம் இப்படி இருக்கு கண்ணு வேற கலங்கிருக்கு பாலான்னு வேற சொல்லுத என்னாச்சு சொல்லுடி...

சுஜி...அவன் வந்து என்கிட்ட propose பண்ணனான் டா...

யாரு பாலா வா...ஓ அதான் பாலான்னு சொன்னியா...நீ என்னடி சொன்ன...வேண்டாம்னு சொல்லிட்டியா பதறியபடியே கேட்க...

ம்ம்ம் ஆமாடி...உனக்கு நான் அவர நேசிச்சேன்னு தானடி தெரியும்...நான் எவ்வளவு நேசிச்சேன்னு உனக்கு தெரியுமா...ஒவ்வொரு நாளும் அவர் என்னைய பார்க்கிற அப்போலாம் அவருக்கு தெரியாம எத்தனையோ முறை பாத்திருக்கேன்...அவர் கண்ணுல ஒவ்வொரு தடவையும் என் மேல அவர் வச்சிருக்க காதல உனர்ந்திருக்கேன்...உனக்கு தெரியாது அவரோட ஒவ்வொரு அசைவும் எனக்கு அவர் மீதான காதலை அதிகப்படுத்திட்டே தான் இருந்திச்சு...ஆனால் நான் அவர என் வாழ்க்கையின் ஒரு பகுதியாய் ஆக்கிகனும்னு நினைக்கிறப்போலாம் என் குடும்பம் தான் கண்ணு முன்னாடி வந்து நிக்குது...

என்னைப் பத்தி உனக்கே தெரியும் சுஜி...லவ் பண்ண பையன கல்யாணம் பண்ணற ஐடியா இருந்தா பண்ணனும்...சும்மா பேருக்கு நானும் லவ் பண்ணதன்னு பண்ணக் கூடாது...அதுல எனக்கு உடன்பாடும் இல்ல...எனக்கு

எழுதியவர் : ராஜிபிரேமா💕 (16-Jun-18, 10:44 am)
பார்வை : 541

மேலே