காதலில் தோல்வி
என் உயிர்நீயே என்று
உன்னை நான் காதலித்தேன்
நீயோ நான் திருமணத்தில்
கொண்டு தந்த சீதனத்தை
நான் அணிந்த நகையுமே
என்னைத்தவிர -நேசிக்கின்றாய்
என்பதை அறிந்தேன் இப்போது
போதும் நம் உறவு இத்தோடு
இதோ நான் கொண்டுதந்த
இவ்வத்தனையும் இனி உனக்கே
உன்னைக் காதலித்து மணம்முடித்தேன்
என்ற என் செயலுக்கு நானே தரும்
தண்டனை என் தன்மானம் நிலைக்க.