நெல்லைக்கு ஈடு இல்லை
நெத்திவேர்வைகள் மண்ணில்மக்கி எழுந்திட
நெல்மணிகள் குலுங்குகின்ற நெல்லை!
சுத்திபார்கையில் கண்கள்சொக்கி விழுந்திட
சுடரியற்கை சிணுங்குகின்ற எல்லை!
நத்தையூறும் நதியோரம் நாசிக்குள்
நறுமணமாய் பூமனம் வீசியதுமுல்லை!
தத்தித்தவழும் வயதுமுதல் நாங்கள்
தமிழை தவறாய் பேசியதுஇல்லை!
கரையோரம் தென்றல் தேடிவந்து
உறங்குகின்ற அடிவாரம்!
கடலோரம் கால்நடந்தால் நேரத்தை
மறந்துவிடும் கடிகாரம்!
பாற்கடலில் கப்பல் மிதங்கும் பால்குடம்
நூறுவலைதோண்டும் நண்டுக்கு கரையெங்கும் கால்தடம்
துறைமுகம் அழகில் சூரியனும்
அறைமுகம் மூடி மறைமுகமாய் ரசித்திடும்
உயர்ந்தோர் மனம் போன்று!
உயர்ந்த பனைமரம் ஒரு சான்று!
பதநீரின் சுவைபோன்று! பாரிலில்லை அவைபோன்று!
நுங்கிலே பங்குகேட்டு பறந்துவரும் சில்வண்டு!
ருசியோடு போட்டிபோட்டால் தோற்றுவிடும் கல்கண்டு!
தெருவெங்கும் வானோங்கும் தென்னைமரம்!
வருவோருக்கு வயிற்நிறைய தண்ணிதரும்!
சடைசடையாய் காய்த்திற்கும் புளியமரம்!
சாம்பாருக்கு ருசியைதரும் எளியமரம்!
தலையைதாழ்த்தி வணங்கிநிற்கும் வாழைமரம்!
கொலையைவீழ்த்தி கொன்றவர்க்கும் வாழ்வுதரும்!
குளுகுளு தென்றல் வீசிடும் புங்கமரம்!
குயில்களும் கூடுகட்டி இங்கே தங்கவரும்!
ஊரெங்கும் மரம் உலகம்தந்த வரம்
வற்றாமல் வளமாய் வயலோரம்
ஓடிடும் பொருணைநதி!
வற்றாத வரமொன்று வாங்கி
வழிந்தோடும் கருணைநதி!
கண்டவர் தேடிச் செல்வா…
உண்டவர் பாடிச் சொல்வா..
கண்மூடி சுவைக்கும் மென்மையான அல்வா!
மொண்டு மொண்டு குளிக்கையில் வரும் சுகம்சுகம்!
கண்டு கண்டு களிக்கையில் மலரும் முகம்முகம்!
கொண்டை சரிந்து நீர் விழுகிறது குத்தாளத்தில்!
மண்டை குளிர்ந்து போகிறார் கும்மாளத்தில்!
ஆறுபடை வீட்டில் இங்கு உள்ளது ஒருபடை!
நூறுதடை வந்தாலும் வேலன்தருவான் தடுங்கா நெல்அறுவடை
பெருபடை பசித்தோர்க்கு அவன்தான் தீராத நல்பழக்கடை!
சட்டை அழுக்கோடு
துள்ளியாடும் பிள்ளைகள்!
நல்ல விழுக்காடு
வாங்கிதரும் பள்ளிகள்!
முறுக்கு மீசையில் காலமெல்லாம்
முத்தமிழை தீட்டியவனும் இங்கேதான்!
குறுக்கு ஆசையில் கப்பலில்
வந்தோரை ஓட்டியவனும் இங்கேதான்!
கிறுக்கு பிடித்த வெள்ளையனை
வெறுக்கும் பாண்டியவனும் இங்கேதான்!
செருக்கு பிடித்த பீட்டாவை
நொறுக்க தூண்டியவனும் இங்கேதான்!