மதுவின் அவலம்
மனதின் வலிகள் மறைவாய் இருக்க
மணமும் இங்கு நாற்றமெடுக்க
பிறை நிலவும் தன் வெளிச்சம் மறைக்க
இவள் வாழ்வும் இருளானதே....
மதுவும் அவன் மனம் மயக்க
மணந்த நாள் மறந்துபோக
வார்த்தைகள் உலறிகொட்ட
இவள் மனதும் உடைந்ததே...
கண்ணாடி குவளை அவன் போதையாகி
கட்டினவள் கைவிடப்பட்டு
செய்த சத்தியம் உடைந்துபோய்
காகித ரூபாய் கரியாய் போகுதே...
குடித்து களித்து அவன் வீடு திரும்ப
அமைதியாக மனைவி காத்திருக்க
புகையின் வாடை மூச்சை அடைக்க
விழுகிறான் அவள் கையிலே....