சாபம் நிறைவேறும்

சிதைந்து போன சடலங்களைக் கண்டு பதைபதைக்கும் இதயத்திற்கு ஆறுதலென்ற தீபம் ஏற்றி நீதியொன்று சத்தியமாய் உலகிலே உருவெடுக்கிறது,
பாரீர்...

யாராலும் தடுக்க இயலாது அறிவியலும் ஆற்றலற்று வீழ உலகிலே ஆயுதங்களை அழித்திட இயற்கை எடுத்திடும் புதுவித அவதாரம் கண்டு ஆட்டம் போட்ட மனிதக் கூட்டம் ஓடி ஒழிய இடம் தேடி அலைந்திடும்,
பாரீர்...

மனித உயிர் பிரிந்தால் பரிவும், மற்ற உயிர்களிடம் இரக்கமின்றி மதிக்காமல் கோழி, மீன் வறுக்கப்பட்டதைப் போல் வறுக்கப்பட ஹுயுமனிக்கன் 65 சாப்பிட ஆர்வமாக நீரும் நிலமும் நெருப்பும் போட்டி போடும், பாரீர்.

பழைய நாட்களில் உக்கிரத்தால் சாபமிடப்பட்ட வார்த்தைகள் உயிர் பெற உலகில் பல வடிவங்களில் மர்மங்களாக நிகழும், ஒவ்வொரு வார்த்தையும் சத்தியமாக நிறைவேறும், பாரீர்.

அன்பை தொலைத்த உலகம் இருந்து பயனில்லை,
குடும்பத்தில் குளறுபடியை உருவாக்கி பாதை தவறிய மனங்களெல்லாம் பொசுக்கப்பட உயிர்க்கப்பட்ட சாபம் நிச்சயம் நிறைவேறும்,
பாரீர்...

நானே கடவுள் என்று கூவியவரெல்லாம் கூவம் நதியைவிட அதிக நாற்றமெடுக்க புழுக்கள் உயிருள்ள உடலையே உணவாய் தின்றிட உலகின் அத்தாட்சியாக நிகழ்வுகள் உருவாகும்,
பாரீர்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (16-Jun-18, 10:50 pm)
Tanglish : saabam niraiverum
பார்வை : 763

மேலே