நோய்
நோய்
இயங்க தடுக்கும்
செயலை முடக்கும்
வேகம் குறைக்கும்
நடை தடைபடும்
படுக்கை பழக்கப்படும்
தோற்றம் பொலிவிழக்கும்
உறக்கம் கெடுக்கும்
தூக்கம் தொலைத்து
இரவுகள் நீளும்
எதிர்காலம் இருள் சூழும்
எண்ணங்கள் துளைக்கும்
சுற்றம் முகம் சுளிக்கும்
உறவுகள் ஓடிமறையும்
விருந்து விஷமாகும்
மருந்தே உணவாகும்
வலிகள் வாட்டியெடுக்கும்
பயமே மணம் கவ்வும் .
இது
உலகில் இருந்து உடல் புகுந்ததா?
இல்லையேல் ,
மரபியலும் ,வாழ்வியலும் சேர்ந்து
உள்ளிருந்தே உருவானதா?