குழப்பத்தோடு ஒரு பயணம்
பேச நினைத்தேன் வார்த்தைகள்
ஏதும் இல்லை
என்னிடம்...
விழியோரம் நீர்
மட்டுமே மொழியாக
பேசுகிறது...
நெஞ்சோடு ஊஞ்சல்
ஆடுகிறது
எண்ணற்ற நினைவுகள் ...
வலியா? சுகமா?
என்று மட்டும் புரிவில்லை...
என்னையே அறியாமல்
வழி தெரியாத ஒரு காட்டில்
பயணம் மட்டும் தொடர்கிறது...
அது இறுதி பயணமா?
அல்லது
பயணத்தின் தொடக்கமா?
குழப்பத்தோடு பயணித்து கொண்டு
தான் இருக்கிறேன் நானும்.......