இலவச Wifi யில் இருக்கும் ஆபத்துகள்
இலவசமென்றாலே என்ன ஏது என்று விசாரிக்காமல் கூட்டம் கூடி விடும், இலவசம் என்பது எப்பவுமே ஆபத்துதான் என்பது குட்டீஸ்களுக்கு கூட தெரியும். இலவசத்திற்க்கும் தமிழர்களுக்கும் ஏதோ பிணைப்பு இருக்கிறது போல, அதனால்தான் இலவசங்களுக்காக. நமது நாட்டையும், உரிமையையும், சுய மரியாதையையும் விற்று விட்டேம். சரி கதைக்கு வருவோம்.
இலவச பைஃபை மிகவும் ஆபத்தான ஒன்றாகும். நம் எல்லோருக்கும் நன்றாகவே தெரியும் யாரும் எதையும் இலவசமாக கொடுக்க மாட்டார்கள். இன்று பல ஹேக்கர்களுக்கு இலவச வைஃபை ஒரு வரப் பிரசாதமாகும். யாரோ ஒருவர் அந்தஅந்த ஹீரோ வழங்கவும் வாய்ப்பு உள்ளது, அது மட்டுமில்லாது சில ஷாப்பிங் மால்களிலும், உணவகங்களிலும் இலவச வைபை வழங்கப் படுகிறது. எந்த வைபை யாக இருந்தாலும் அது பிரைவேட் நெட்வேர்கா இல்லையா என்பதை சரி பார்க்கவும். பிரைவேட் நெட்ஒர்க் என்றால் தவிர்க்க முடியாத பட்சத்திற்கு பயன் படுத்தலாம்.
அந்த வைஃபையை நீங்கள் பயண் படுத்துவதன் மூலம் எளிதாக அவரால் உங்களுடைய MAC Address/ IP address கண்டறிய முடியும், மட்டுமல்லாது அந்த வைஃபையை பயண் படுத்தி நீங்கள் எந்த எந்த இணைய தளம் செல்கிறீர்கள் என்ற விபரமெல்லாம் அந்த ஹேக்கர் கண்கானித்துக் கொண்டிருப்பார்.
Man in the Middle Attack:
இதற்கெல்லாம் ஒரு படி மேலாக, நீங்கள் ஒரு இணைத தளம் சென்று டைப் செய்யும் User Name, Password கூட அவறால் தெளிவாக பார்க்க முடியும். இதற்க்கு ஹேக்கர் மொழியில் MITM என்பார்கள்.
உங்களது மொபைப் போனுக்குள் ஊடுறுவ அந்த ஹேக்கருக்கு அதிக பட்சம் 20-30 வினாடிகள் போதுமானது.
Malware distribution:
உங்காளது கண்ணியில் / கை பேசியில் உள்ள இயங்கு தளம் (OS) பல்வேறு பாதுகாப்புகளை கொண்டிருக்கும், எனினும் அதில் இருக்கும் சில சில பலவீனமாக இருக்கும் கோப்புகளின் வழியே ஹேக்கர் நுழைந்து அவர்களுக்கு என்ன தேவையோ உங்களது அனுமதி இன்றி/ உங்களுக்கு தெரியாமலேயே எடுக்க முடியும். ( உங்களது வங்கி கணக்கு விபரம், புகைப்படங்கள், இன்னும் பல).
பாதுகாப்பு முறை:
முடிந்த வரை இலவச வைபையை தவிற்ப்பது நல்லது, மிக அவசியமெனில் VPN பயண் கனெக்ட் செய்து இலவச வைபைய பயண் படுத்தவும்.
இலவச வைபையில் தவிற்க வேண்டியவை:
1.Auto WiFi connect ஆப் செய்யவும்
2. User Name , Password பயண் படுத்தி எந்த இணைய தளத்தையும் திறக்க வேண்டாம்.
3.வைபை/ ப்ளூடூத் பயண் படுத்தாத நேரத்தில்.அனைத்து வைக்கவும்.
4. உங்கது மிக முக்கியமான விபரங்கள் உள்ள இணைய தளத்தை திறக்க வேண்டாம் ( வங்கி, மருத்துவம், காப்பீடு, இன்னும் பிற..)
5.பாஸ்வேட் தெரியாத / இல்லாத பைவையை கனெக்ட் செய்ய வேண்டாம்.
6.எந்த கோப்புகளையும் பகிற வேண்டாம்.