விபிஎன் பற்றி சுவாரஸ்யமான தகவல்கள்

வி.பி.என் என்பதன் விரிவாக்கம் விர்ச்சுவல் பிரைவேட் நெட்வொர்க் ஆகும்.

அதாவது நீங்கள் பயன்படுத்திடும் இணைய இணைப்பை மிக பாதுகாப்பாக பயன் படுத்த உதவுகிறது. வி.பி.என் பயன்படுத்தும் போது தடை செய்யப்பட பல இணையதளங்களை திறக்க முடியும். மட்டுமல்லாது நீங்கள் இணையம் பயன் படுத்துவதை யாரும் கண்காணிக்க கூட முடியாத அளவிற்கு உங்கள் இணைய இணைப்பையும், நடவடிக்கைகளையும் முக மூடி போட்டு வி.பி.என் மறைகிறது.

இன்று வி.பி.என் மிகவும் பிரபல்யம் ஆகிவிட்டது, நாம்மில் பலர் பயன் படுத்த தொடக்கி விட்டோம். ஆனால் வி.பி.என் உருவாக்கப் பட்டதன் காரணம் அறிந்து கொள்வது மிக அவசியம் ஆகும்.

நீங்கள் கூகுளில் மோட்டு பத்துலு வீடியோ தேடுகிறீர்கள் என்றால் முதலில் நீங்கள் பிரவுசரில் டைப் செய்வேர்கள். பிறகு வீடியோ வரும்.

பொதுவாக நீங்க இணையம் பயன் படுத்தும் போது ஹேக்கர்களால் அல்லது அரசாங்கத்தால் கண்காணிக்கப் படலாம். நீங்கள் டைப் செய்வீர்கள் வீடியோ வரும் அவ்வளவுதான் உங்களுக்குத் தெரிந்தது.

நான் முன்னமே குறிப்பிட்டது போல நீங்கள் தேடுவது உங்களது இணையம் வழங்கும் சர்வருக்கு போகும், அந்த சர்வர் நீங்கள் தேடியதை இணையத்தில் தேடி பிறகு உங்களுக்கு கொண்டு வரும்.

நீங்கள் தேடும் வீடியோவை, உங்களது பிரவுசர் உங்களது இணையம் வழங்கும் சர்வரிடம் கேட்கும் இந்த ஐ.பி அட்ரஸில் உள்ள செல்போன் / கணினி இந்த வீடியோவை பார்க்க வேண்டுமாம் என்று. உடனே அது இணையத்தில் தேடி நமது பிரவுசரிடம் ஒப்படைக்கும், பிறகு நீங்கள் வீடியோ பார்ப்பீர்கள். இங்கு வீடியோ என்பது ஒரு உதாரணத்திற்காக மட்டும் தான். நீங்கள் பிரவுசரில் தேடும் ஒவ்வொரு தேடலும் அப்படிதான் நிகழும்.

நீங்கள் தேடும் ஓவொரு தேடலும் உங்களுக்கு இணையம் வழங்கும் சர்வரில் பதிவாகி கொண்டே இருக்கும். உங்களது ஐ.பி அட்ரஸுடன். உங்களது ஐ.பி அட்ரஸ் ஒருவருக்கு தெரிந்தால் உங்கள் தலை விதியே அவருக்கு தெரிந்தது போல என வைத்துக் கொள்ளுங்களேன்.

வி.பி. என் பயன் படுத்தும் போது, நீங்கள் தேடும் ஒரு வீடியோ முதலில் உங்களது பிரவுசரில் இருந்து வி.பி.என் க்கு போகும், பிறகு வி.பி.என் உங்களது ஐ.பி அட்ரஸ் சொல்லாமல் அது பொய்யயாக ஒரு ஐ.பி அட்ரஸ் சொல்லி இந்த ஐ.பி அட்ரஸ் இந்த வீடியோவை பார்க்க வேண்டுமாம் என்று உங்களுக்கு இணையம் வழங்கும் சர்வரிடம் கேட்கும். அந்த சர்வரின் வேலை யார் என்ன என்று ஆராய்வது இல்லை, அதன் வேலை தேடியதை இணையத்தில் பிடித்து கொண்டு வருவது மட்டும்தான். உடனே அது தேடி உங்களது வி.பி.என் சர்வருக்கு அனுப்பும் வி.பி.என் உங்களது பிரவுசருக்கு அனுப்பும்.

இவ்வாறான நிகழ்வு தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். இதற்கிடையில் அரசாங்கம் / ஹேக்கர் உங்களது இணைய தேடலை கண்காணிக்க முடியாதவாறு கண்ணில் மண்ணை தூவும் வேலையையும் வி.பி.என் பார்த்துக் கொண்டு இருக்கும். இதற்கு என்கிரிப்ஷன் என்று சொல்வார்கள். நீங்கள் தேடும் அல்லது இணையத்தில் பார்க்கும் விஷத்தை வி.பி.என் மறைத்து விடும். அல்லது உங்களை கண்காணிப்பவர்களை குழப்பி விடும்.

சரி, வி.பி.என் எதெற்கெல்லாம் பயன்படும் ?
இணையத்தில் தடை செய்யப்பட விஷயங்கள் பார்க்க.

இலவச வைஃபை பயன்படுத்தும் போது ஹேக்கர்கள் நம்மை பதம் பார்க்காமல் இருக்க.

நீங்கள் எங்கிருந்து இணையம் பயன் படுத்துகிறீர்கள் என்று யாருக்கும் காட்டாமல் இருக்க.

வி.பி.என் நல்ல விசயத்திற்கு பயன் படுத்தினால் நீங்கள் நன்மை பெறுவீர்கள், தீய விசயத்திற்கு பயன் படுத்தினால் விளைவு பயங்கரமாக இருக்கும் என்பதை நினைவில் கொள்க.

வி.பி.என் பெறும் முறை :
நீங்கள் தொழில் நுட்ப வல்லுனராக இருந்தால் நீங்களே உருவாக்க முடியும். சாதாரண பயனாளராக இருந்தால் இணையத்தில் பதிவிறக்கம் செய்யலாம். வி.பி.என் விண்டோஸ், மேக் ஓ.எஸ், ஆன்றாயிடு, ஐ.ஓ.எஸ், மற்றும் பிற கருவிகளுக்கும் கிடைக்கும்.

பி.கு : வி.பி.என் சில நாடுகளில் தடை செய்யப் பட்டுள்ளது, சில நாடுகளில் அதிக கட்டுப்பட்டுடன் பயன் படுத்த அனுமதி உள்ளது, சில நாடுகளில் பயன் படுத்தினால் கடுமையான குற்றம் செய்தவராக சிறையில் அடைக்கப் படுவீர்கள் என்பது குறிப்பிட தக்கது.

எழுதியவர் : ஹாஜா (19-Jun-18, 10:56 am)
சேர்த்தது : ஹாஜா
பார்வை : 234

சிறந்த கட்டுரைகள்

மேலே