எப்பொழுது உன்னை காண்பேன் என் தோழா
எப்பொழுது உன்னை காண்பேன் என் தோழா
என்றும் உன் தோழமை எனக்கு வேண்டும்
இம்மண்ணில் நான் பிறந்த தருணம் என் தாய் என் நட்பானாள்
என்னை முதல் முறையாய் தூக்கி அழகு கண்ட என் தந்தை இரண்டாம் நட்பானார்
என் தோழா நீ என்றுமே என் கடைசி வரை என் துணையாய் இருந்து வழி நடத்த
உன்னை என்னவென்று சொல்வதோ
என் தோழா
உன் நினைவுகள் என்றும் விலகாது
என் உயிர் அது பெற்றோர் தந்தது
என் செல்வம் என் வழி வந்தது
என் உறவுகள் அது இணைந்தது
எல்லாம் நிலையற்று போகையில்
ஆனால் தோழா உன் நட்பு மட்டும்
எல்லாம் கடந்து நிற்கிறதே
அது எதனால் ?நான் என்னிடமே வினவினேன்
அது உன் உண்மையான அன்பினாலே என் தோழனே
என்றும் உன்னோடு வருவேன் என்றாய்
பாதியில் என் விரல் விட்டு சென்று விட்டாயே
எங்கு தான் சென்றாய் ?
உன்னை தேடி அலைகிறேன் என் தோழா
மீண்டும் உன்னோடு விளையாட
மீண்டம் உன்னோடு சண்டை பிடிக்க
மீண்டும் உன் கை கோர்த்து வெகு தூரம் நடக்க
மீண்டும் உன் தோல் சாய்ந்து தூங்க
மீண்டும் உன்னோடு பேச
நம் பழைய நினைவுகளை மீண்டும் துளிர்க்க வைக்க
துன்பமே என்பது தெரியாமல் சிரித்து மகிழ
எப்பொழுது நீ மீண்டும் வருவாய்
உன்னை காணவே என் தோழா
எத்தனை பிறப்பு வேண்டுமானாலும் எடுப்பேன்
அந்த நொடி உன்னை காண
உன்னோடு பேச