அவளோடு முதல் சந்திப்பு

அவளோடு முதல் சந்திப்பு...

பேசனும்னு யோசிச்சு வச்சதெல்லாம்
மறந்துபோச்சு...

புதுசா பேசப் பழகுறது போல நாவு தடுமாறுது...

தேர்வு முடிவு வர்றப்ப இருக்குமே ஒரு பதட்டம் அப்பப்பப்பா...

என்னோட இதயம் ஏன் அவ்ளோ வேகமா துடிச்சது, புரியலையே...

அம்புட்டு கூட்டத்துல கண்ணு அவள மட்டும் பாத்துட்டே இருக்கு...

தொண்டை வறண்டு தண்ணீருக்காக போராட்டம் நடத்த ஆரம்பிச்சிருச்சி...

மயக்கம் வர்ற மாதிரி காதெல்லாம் அடைச்சிருச்சி...

என்னை பாத்துக்கிட்டே, என்கிட்டே வந்து, என் பேர சொல்லி கூப்பிட்டா பாருங்க..

ஐயோ என்னா உணர்வு அது!!! சிரிக்கிறேன், தலைய கோதுறேன், கண்ணெல்லாம் சிமிட்டுது, நாவு பல போராட்டத்துக்கு மத்தியில சில வார்த்தை பேசி என்னை மீட்டெடுத்துச்சு...

காதலா, பைத்தியமானேனா, குதிக்கிறேனா, மிதக்குறனா இன்றைக்கு வர ஒண்ணுமே புரியல... நினைக்கும் போதெல்லாம் சிரிக்கிறேன்...

எழுதியவர் : ஜான் (20-Jun-18, 3:48 am)
பார்வை : 264

சிறந்த கவிதைகள்

மேலே