அம்மா- பையன் உரையாடல்

s

அம்மா : ஏண்டா கண்ணு,சங்கர் காலங்கார்த்தால
இந்த கண்ராவி லேப்டாப் திறந்துவெச்சிண்டு
கண்டதையும் பார்த்துண்டு நீயே சிரிச்சிகிட்டு இருக்க
மொதல்ல போய் பல் வெலக்கிட்டு சாமிய
கும்பிட்டுவாடா நல்லது தெரியும் ......அப்புறம் போய்
நம்ம கடைல போய் உக்காரு , கலாவைத் திற
நாலு காசு சம்பாதிக்க பாரு, அப்பாக்கும் வயசாகிறது
யோசிச்சாயா.... எப்பவும் லேப்டாப்,பிரெண்ட்ஸ் ,
சினிமான்னு காலத்தை வேஸ்ட் பண்ணாத..காலம்
திருப்பி வராது............

சங்கர் : அம்மா, நீ நெனைக்கறா மாதிரி இல்ல, காலம் மாறி
வருது, நாம மாறனும்; உன் காலத்துல லேப்டாப்
மொபைல் போனே கிடையாது......இப்போ இவை
உலகையே ஒரு நொடில உன் கைக்கீழே நிறுத்தும்
புரிஞ்சிக்கம்மா. நான் அதுல தமாஷு நிறைய
பார்த்தாலும், நல்ல விஷயங்க நெறய காத்துக்கிறேன்
நம்ம பிசினஸ் எப்படி வளப்பதுத்த என்றெல்லாம்
சும்மா கல்லாவை திறந்து வெச்சா வியாபாரம்
காசு தராதுமா.........பார் நாளை வரும் நானும்
பெரிய பிஸிநெஸ்ம்ன ஆகி காட்டறேன்........
ஆகி காட்டறேன் ......அப்ப சொல்லு .............
சரிம்மா, இதோ கிளம்பி போறேன்மா , நீ
சொல்றாமாதிரி, பல் விலக்கிட்டு , சாமிய
கும்பிட்டு வரேன் இப்போதைக்கு ........
நீ பொலம்பாதமா .....எல்லாம் நன்மைக்கே

அம்மா : டேய் இவ்ளோ அழகா பேசறய, நீ சொல்ற அந்த
லேப்டாப் உபயோகம் பண்ணி ஒழுங்கா
உன் டிகிரி யா முடிச்சுக்கோடா........அப்பறம்
பேசு...............

சங்கர் : அம்மா ..............நீ உடமாட்டேயே.............
சரி அதையும் பாக்கறேன் ஒரு கை...................

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (20-Jun-18, 8:17 am)
பார்வை : 1124

மேலே