யார் அவன்


பார்க்கும் முகம்
ஓராறு
காக்கும் கரம்
ஈராறு
கூவும்
தோகை
மயில்
கூர் வேல்
ஓன்று
அணைத்த
கொடி இரண்டு
சேவல் கொடி
ஓன்று
யாக்கும்
கவிதை
தமிழ்
யார் என்று
கேளாதே
முருகா
என்று அழை.
----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (14-Aug-11, 7:28 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 452

மேலே