நம் இதயங்களை

புள்ளிகளை இணைத்து
அழகிய வண்ணக்
கோலமிட்டு விடுகிறாய்!
துளிகளையெல்லாம்
குடத்தில் ஒன்றுசேர்த்து
தண்ணீராக்கி விடுகிறாய்!
ஒவ்வொன்றாய்
கோர்த்து கோர்த்து
பூக்களை அழகிய
மாலையாக்கி விடுகிறாய்!
தனித்தனியே இருக்கும்
வண்ணங்களை எல்லாம்
ஒன்றாக வரைந்து
வண்ணமிகு கண்கவர்
ஓவியமாக்கி விடுகிறாய்!
உன் நிகழ்வுகள்
ஒவ்வொன்றாய் சேர்த்து
நீண்ட நெடிய கனவுகளை
தந்து விடுகிறாய்!
எதை எதையோ
ஒன்று சேர்த்து
அழகு பார்க்கும்
என் தேவதையே
தனித்தனியே
பிரிந்து கிடக்கும்
நம் இதயங்களை
எப்பொழுது ஒன்றாக்கி
அழகு பார்க்க போகிறாய்!