என் செல்ல பூனைக்குட்டியே
நான் வளர்த்த என் செல்ல பூனையே....
ஆண் பிள்ளையா நீ இருந்தாலும்..
உன் அழகை பார்த்து மச்சக்கன்னி
என்று பெண் பிள்ளை பேர் வச்சேன்...
அப்பாவுக்கு உன்ன பிடிக்காம போனாலும்...
பிடிவாதமா உன்ன வீட்டில வளர்க்க வச்சிக்கிட்டேன்....
சின்ன சின்ன சுட்டித்தனம் நீ செய்து..
அப்பாவோட மனச கவர்ந்திட்ட......
ஒரு நாள் நீ என்ன பாக்கலனாலும்..
பாலும் சோறும் திங்கவேமாட்ட....
நான் வீடு திரும்பும் வரையிலே...
வாசல் பாத்து காத்திருப்ப...
பால் வச்சி குடிக்க சொன்னேன்.
குடிக்காம வந்து மடிமேல கொஞ்சுவ...
ஆயிரம் சோகம் மனசிலே இருந்தாலும்..
உன்கூட விளையாட சோகமெல்லாம்
பறந்திடும்...
குடும்ப அட்டைல உன் பேர சேக்கல...
ஆனாலும்.... நீ ...
அம்மாவுக்கும் அப்பாவுக்கும் செல்லமான தத்து பிள்ளை...
எனக்கும் அண்ணனுக்கும் கடைக்குட்டி தம்பி...
வாய் மட்டும் தான் உன்னால பேசமுடில...
மற்றபடி நீயும் வீட்டில் ஒரு குழந்தையே...
உயிர் பிரியும் நேரம் வந்ததும்...
கடைசி ஆசைய போல
என் முகத்தை பாத்துட்டே...
உன் உயிர விட்டியே...!!!!!
உன்ன போல இன்னும்....
ஒரு ஜீவனையும் பாக்கல....
* ~லீலா லோகிசௌமி~ *