கணினி என் காதலி
கணினி என் காதலி
கற்பனை வளர்க்கும் நாயகி
கவிதை தரும் தேவதை
தட்டத் தட்ட விட்டல் படம் போல்
வித விதமாக எழுந்து வரும் மோகினி
பகலில்லை மாலையில்லை நள்ளிரவில்லை
என்னை அருகமர்த்தி ஆசை வார்த்தை பேசுவாள்
எழுது எழுதுயென இன்பத் துன்புறுத்துவாள்
எழுதாமல் போனால் பந்த் அறிவிப்பாள்
எழுத முடியாமல் தலையை பிய்த்துக் கொள்ளச் செய்வாள்
படுமோசக்காரி இந்த எலெக்ட்ரானிக் வித்தைக்காரி
இவள் தன் மின்னணு கதிர்வீச்சு இயக்கத்தில்
என்னை எலெக்ட்ரான் புரோட்டானாக சுழல வைக்கிறாள் !