கற்பை தொலைத்தேன்
களவாடிய பொழுதுகளில்
களமிறங்கி என்
நேரங்களை
தொலைத்தான்
அவன் ...!
தொல்லை என
தொலைதூரம் நின்ற
அவன் கண்களில்
அருவருப்பாக
நான் ..!
அன்று
அவன்முன்
கற்பை
ஒழிக்கவில்லை ..!
இன்று
பலர்முன்
என்னை
ஒழிக்க
வைத்துவிட்டது ..!
கற்பை
தொலைத்து
கருப்பைக்குள்
கருவை மறைத்தேன் ..!
கலவி
அவனோடு தான்
அனால்..
கலவரம்
எனக்கு மட்டும் ...!
நான்
இன்றழித்த
கரு,
நாளை
உன்னை
அழிக்கும்
உன் மகனாக ...!