தாமரை இதழ் விழியழகி
மண் வாசம் வீசும் மழைச்
சாரலிலே....!!!
மை கலந்த உன் தாமரை இதழ்
விழியை கண்டேன்...
தாமரை குலத்து
யுவராணியோ .....!!
இவள் என்று....
மெய்மறந்தே நின்றேன்...
என்
இதழால் ஸ்பரிசிக்க
முயன்றேன்....!!
சட்டென வேலி போட்டது...
உன்னிரு இமைகள்....!!