உயிர்காதல் வந்ததே

உயிர்காதல் வந்ததே
என் கண்ணே
இசை உருவமெடுத்ததே
என் முன்னே
பகல் இரவுமாகுதே
கண் முன்னே
உயிரே...
இறை உருவமற்றவன்
தெரியாதா?
கடல் முடிவில்லாததும்
தெரியாதா?
காதல் புனிதமானது
புரியாதா?
உயிரே...உயிரே...
நீ சொல்லும் ஒருவார்த்தை
ஒருவார்த்தை...
யாரோ?
என்கண்ணில்...
கொண்டால்
உயிர்காதல் தான்...
உன்வார்த்தை இல்லாமல்
எந்நெஞ்சம் சாகும்
ஒருவார்த்தை
சொல்லும் வரையில் தான்!
அலையென்று இல்லாமல்
கடலென்று இல்லை
காதலும் மனதில்
அதுபோல் தான்!
பூவென்று சொன்னாலே
என்கண்ணில் நீதான்
நீயில்லை பூக்கூட
பூவில்லை நார்தான்
கண்பார்த்தால்
கடலில் நிற்பேன் நான்...
கடலுமே என்கண்ணில்
எரிமலை ஆகும்
நீயென்னை வீசிச்சென்றாலே
புற்கூட என்கண்ணில்
பூக்களும் ஆகும்
நீயென்னை காதல்கொண்டாலே
எந்நெஞ்சில் உன்பெயரை
எழுதியபோதும்
உன்கண்ணில் என்காதல்
அழைகின்ற போதும்
சொல்லுந்தன் கதலன் யார்???

எழுதியவர் : sahulhameed (22-Jun-18, 5:09 pm)
சேர்த்தது : HSahul Hameed
பார்வை : 73

மேலே