வென்றுவிடுவேன் பஞ்சபூதங்களையும் 555
உயிரே...
உன் விழிகளை தென்றல் வேகமாக
தீண்டி செல்லும் போதெல்லாம்...
துளிநீர் எட்டி
பார்க்குதடி கண்ணே...
அப்போதெல்லாம் என்
விழிகள் செந்நிறமாகுதடி...
தென்றலுக்கு
தடைவிதிக்க ஆசை...
பஞ்சபூதங்களை வென்றவர்
யார் உலகில்...
பஞ்சபூதங்களையும் வென்றுவிடுவேன்
நீ என்னுடன் இருந்தால்...
என் உயிரில்
கலந்தவளே.....