மணற்சிலை

ஓங்கிவரும் வங்கக்கடல் அலைகள்
கடற்கரை மணலை வந்து தழுவிய வண்ணம்
கடற்கரை அருகில் அந்த இளைஞன்
சிறுகுன்றாய் மணலைக்குமித்தான்
அருகில் நான் பார்த்துக்கொண்டே இருந்தேன்
மணற்குன்றை இப்போதவன் கருங்கல்லாய்
பாவித்து வெறும் கைகளால் உளியின்றி
சிலை ஒன்று வடிப்பதில் மும்முரமாக இருந்தான்
சூரியனும் வேகமாய் மேற்கில் மறையப்பார்க்க
அந்திப்பொழுது சாயல் இப்போது கடற்கரை மீது
இப்போது அந்த இளைஞன் அருகில் சென்றடைந்தேன்
இப்போது தெரிந்தது ஓர் ஆரணங்கை மணலில்
அவன் கைவண்ணத்தால் உருவாக்க ....நான்
என்னை மறந்து அதையே பார்த்து வீட்டையும்
மறந்து அங்கேயே இன்னும் இருந்தேன்-இவ்வளவில்
வெள்ளிநிலவு வானில் பவனி வந்தது -இளைஞன்
மணற்குன்று இப்போது அங்கில்லை-அங்கு நான்
கண்டது அதில் அவன் கடைந்தேடுத்த அற்புத
அழகியின் மணர்ச்சிலை- வெள்ளியில் வடித்த சிலையாய் !
பெரிய அலை , அவன் வடித்த சிலையைத்தீண்டி விட்டு
போனது ........ சல்லடைபோல் அரித்து விட்டு...
இளைஞன் இப்போது ஏதோ வெறிகொண்டவன்போல்
அந்த சிலையைப்பார்த்து சிரித்துக்கொண்டே
இருந்தான்.........சிரிப்பும் அடங்க மெல்ல அழுதான்
இப்போது நான் அவனை அவன் முதுகில் தட்டி ,
ஆறுதல் செய்து என்னவென்று வினவ, அவன்
அழுதுகொண்டே சொன்னான்' அவன் வடித்த சிலை
'அவள், அவன் காதலி என்றும், உறவாடி, காதலித்து
அவனைவிட்டுவிட்டு வேறொருவனுடன் .........
இப்போது மீண்டும் சிரித்தான்.....அந்த சிதைந்த
சிலையைப்பார்த்து.....அலையே அவள் தந்த
வலியை என் இதயத்திலிருந்து எடுத்திட முடியலை
அலையே நீயாவது அவளை சிதைத்தாய் ........
இனி நான் அவளை நினைத்திடுவேனா ..........
இல்லை, இல்லை......என்று சொல்லியவாறு
எழுந்து சென்றான்................
இப்போது மீண்டும் ஓர் அலை சிதைந்த சிலையை
அழித்துவிட்டது .............
அவன் திரும்பிப்பார்த்தான் வேகமாக நடந்தான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (23-Jun-18, 3:07 pm)
பார்வை : 74

மேலே