தாயாகிறேன்

என்னுயிரால்...
என்னுயிரில்...
உருவான உன்னை..
செதுக்கினேன்...
என் சிந்தையில்...!
கற்றுக்கொண்டேன்...
கர்வத்தை...
சிறந்த சிற்பி நான்..!

ஆழ் மடி துயிலின் போது..
அம்மாவின்
செயல்கள் ஏதும்
ஆத்திரமூட்டுமோ...?!
அச்சத்தினில்
தும்மல் கூட தொலைகிறது...!


உன் முகமறியாமல்
முழிப்பது போல்...
உன் மொழியறியாமல்
தவித்திடுவேனோ...!

நீ சிந்தப்போகும்
சின்ன சிரிப்பினில்
சிதறப்போகின்றன...!
நான் சேர்த்து வைத்த
துயரங்கள்...!!


உன் அழுகுரல்
கேட்டு
அழப்போகும்
அந்நாளின்
விடியலை நோக்கிய
விழிகளுடன்
காத்திருக்கிறேன்...!!!

எழுதியவர் : மணிசோமனா ஜெயமுருகன் (23-Jun-18, 8:50 pm)
பார்வை : 664

மேலே