தாய்மாமன்
தாயால் கிடைச்ச உசத்தியான சொந்தம் தாய்மாமா...
எத்தனை சண்ட போட்டாலும் உடன்பிறந்தவ கட்டிக்கிட்டு போகையில உசுரு பிரியும் வலியில துடிச்சு போறவன் தாய்மாமன்...
உடன்பிறப்பு புள்ளய பெத்து எடுத்ததும் கொண்டாடி தீர்க்கும் முத ஆளு தாய்மாமன்...
எல்லா தாய்மாமனுக்கும் மூத்த புள்ள உடன்பிறந்தவ புள்ள...
உடன்பிறந்தவ கண்ணுல தண்ணி விட்டா துடிதுடிப்பவன் தாய்மாமன்...
பாசத்துக்கு எல்லையில்ல, தாய்மாமன் உடனிருக்கையில...
உதவின்னு கேட்டா மறுக்காம செய்றது தாய்மாமன்...
நாம தப்பே செஞ்சாலும் கோவத்த காட்டாம பக்குவமா திருத்துறது தாய்மாமன்...
அழணும்னு தோணுச்சுனா தாய்மாமன் தோளுல சாஞ்சுக்கலாம்...
நாம படிச்சு முடிச்ச சேதிய மாமன் கிட்ட சொல்லி அவரு சந்தோசத்த பாக்குறதே அம்புட்டு நிறைவு...
வேலைக்கு போனா சாதிச்சு காட்டுன்னு அறிவுரை சொல்வாரு...
வழிகாட்டி தோள்கொடுக்க தாய்மாமனப் போல யாருமில்ல...