உன் நினைப்பு

என்ன
உன் கண்ணுக்குள்ள
வெச்சுக்கோ...
இல்ல காணாமல்
போயிடுவேன்...
நெஞ்சுக்குள்ள பூட்டிக்கோ..
இல்ல
காத்தோட கலந்துடுவேன்...
உன் கனவோடு சேர்த்துக்கோ...
கரைஞ்சுடாம
பார்த்துக்கோ...
உன் நெனப்புல
இந்த உசுரு உடாம
துடிக்குதுடி...
உட்டுப்புட்டு போ னு
சொன்ன..
திக்கும் இல்ல ..
திசையும் இல்ல...
உன் நெனப்பு இல்லையினா..
இங்க உசுருக்கே
வழியுமில்ல...
காத்தோடு கலந்து
வரும்..
மூங்கிலின் நாதம் போல...
என்னோட உன்
நெனப்பு ஒன்றாகி
கிடக்குதடி...

எழுதியவர் : வே.சரவணன் (24-Jun-18, 11:06 am)
சேர்த்தது : வேசரவணன்
Tanglish : un NINAIPPU
பார்வை : 606

மேலே