சிறுமை கண்டு பொங்குவாய்

பழம்பெரும் பாரதம் பட்டுப் போனதும் நம் கண் முன்னால்தான்
வறட்சியும் வெள்ளமும் வறுமையும் வாட்டியதும் நம்மைத்தான்
பாரம்பரியத்தை ஒழிக்க அரசியல் புள்ளிகளே விடக்குப்பிகளானதும் நம்மில்தான்
வாய்மூடி வாய்மூடியே ஐம்புலனும் அற்றுப்போனோம்
ஆட்சிகளின் இருளிலே அடிமைகளாய் வாழ்ந்தோம்
சிறுமைகள் தழைக்கத் தழைக்கத் தலை குனிந்தோமே
ஆயினும்
ஏறுவாசலில் எழக் கற்ற நாம் அறப்போர் முரசையும் கொட்டவேண்டும்
நாட்டில் தழைக்கும் களைகளின் ஆணிவேர் அறுக்கப்பட்ட வேண்டும்


பசுமை பாரதத்தை பாலையாக்கியப் பாவிகளானோம்
வாசம் வீசும் வண்ணப் பூக்களுக்கு வர்ணம் பூசினோம்
மனம் கமழும் நதிக்கரைகளை நரக வாயிலக்கினோம்


தாய்மொழி வழிக் கல்வியை நாடு கடத்தியே விட்டோம்
சிதறும் குருதி கண்டு உதறிவிட்டு ஓடினோம்
முளைவிடும் சிங்கராச் சிட்டுகளை மூன்றிலே சிறையில் முடக்கினோம்
மதிப்பெண்ணுக்காக மதியை வளர்த்தே மனிதத்தைப் பறிக்கிறோம்
இக்கரையில் அக்கறை காட்டாது வேறொரு உலகம் வெளியில் தேடுகிறோம்

சூழ்ச்சி வலை விரித்தாடும் தண்ணீர்ப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கண்டபாடில்லை
உயிர் கொடுக்கும் உழவனின் உயிர் குடிக்கும் உலகம் மாறுமா?

சிறுமை கண்டு சீறிப்பாயது நீயும் தமிழக ஆறுகளானது ஏன் ?
எம் இளைய சமுதாயமே
பொங்கிவா இளைய சமுதாயமே !
நல்வழி நடத்தி வாருங்கள்
எம் முன்னோடிகளே
பசுமை பாரதத்திற்கு திரும்ப பாதை வகுத்து கொடுப்போம்
பசுமை மனதிலும் வளத்திலும் நிறைந்திடவே

எழுதியவர் : கயல் அமுது (24-Jun-18, 12:30 pm)
சேர்த்தது : கயல்
பார்வை : 202

மேலே