உன்னைத் தேடும் விழிகள்
செந்தளிர் மேனியாள் செவ்விதழ் காரிகை
செந்தமிழ் பேசும் தமிழச்சிப் பெண்ணாள்
பூவினும் மென்மையான கன்னம் கொண்டாள்
ஒடிவது போல இடையினைக் கொண்டாள்
கண்ணால் இழுத்து கற்பனை கொடுத்தாள்
அழகில் மயக்கி ஆசையை வளர்த்தாள்
ஆசையைப் பெருக்கி காதலை விதைத்தாள்
பக்கம் வந்து வருடாத தென்றலாய்
அருகில் வந்து விலகி சென்றாள்
சாலையில் நடந்தால் அவளது முகமே
சோலையில் சென்றால் அவளது முகமே
துயிலச் சென்றேன்; தூக்கம் இல்லை
கண்ணைத் திறந்தே கனவு கண்டேன்
கனவில் வந்ததும் அவளது முகமே
நானென் செய்வேன்? நானென் செய்வேன்?
தேடும் விழிகளுடன் ஏக்கம் கொண்டேன்
ஆக்கம்: வேல்பாண்டியன் கோபால்