ஈரப் புன்னகை

தேக்கி வைத்த கண்ணீர் துளிகளும் ...
தூங்காமல் இருந்த இரவுகளும் ...
ஏக்கம் தந்த நினைவுகளும்....
வெறுமையாய் விடிந்த
காலை பொழுதுகளும்......
மூன்று வருடம்...
பிரிதலுக்கு பிறகு...
இன்று முற்று புள்ளி
வைத்ததுவிட்டது.......
உன் விழியோர ஈரப் புன்னகையும்.....
என் கன்னத்தில் உனது இதழ் பதித்த
முத்தமும்....!!!!

~லீலா லோகிசௌமி~

எழுதியவர் : லீலா லோகிசௌமி (25-Jun-18, 4:48 pm)
Tanglish : earp punnakai
பார்வை : 122

மேலே