முற்றுப்புள்ளி இன்றி ஓர் கதை

உனக்கு நன்றி செலுத்துவது திருப்தி இல்லை எனக்கும்
நீ தரப்போவதற்கு ஏங்குதே என் மனம்...

யா அல்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்!

நன்றிகள் கோடி செலுத்த வேண்டும் உனக்கும்
நீ தந்தவைகள் கோடி என்னிடம் இருக்க,
நீ தரப்போவதற்கு ஏங்குதே என் மனம்...

யா அல்லாஹ்! ஸுப்ஹானல்லாஹ்!

முழு மனிதனாய் அவதரிக்கப்போகிறேன் சீக்கிரம்
உன் அருட்கொடைகளுக்கு இல்லையே அளவும்...

யா அல்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்!

முரட்டு விரல்களுக்குள் பிஞ்சு விரல்கள் மாட்டிக்கொள்ளும்
என் கரிசனம் பெற்றுக்கொள்ள வரப்போகுதோர் வரம்...

யா அல்லாஹ்! ஸுப்ஹானல்லாஹ்!

முற்றுப்புள்ளி இன்றி இந்தக்கதையும் தொடரும்....

யா அல்லாஹ்! இன் ஷா அல்லாஹ்!

எழுதியவர் : பர்ஷான் (25-Jun-18, 2:46 pm)
பார்வை : 254

சிறந்த கவிதைகள்

மேலே