விதையின் நுனியில் உன்னை கண்டேன்
விதையின் நுனியில் உன்னை கண்டேன்
என் கனவே
உனை எங்கெங்கோ தேடினேன்
தேடி தேடி அலைந்து அறிந்துகொண்டேன்
ஆனால் உன்னை காண முடியாமல் தவிக்கும் பேதையல்லவோ
எங்கு எங்கு என்று நேற்று வரை தேடினேன்
இன்று புரிந்து கொண்டேன்
என் மனம் எனும் சிறு விதை நுனியில் கண்டு கொண்டேன்
மாயம் எனும் இருட்டை அகற்றினேன்
நுனியின் எல்லையில் முளைப்பாய் நீ இருக்க
என் கனவே உன்னை வளர்க்க முயற்சி எனும் நீர் பாய்ச்சிடுவேன்
தன்னம்பிக்கை எனும் உரம் போட்டிடுவேன்
தடை எனும் களை வந்தால் வேரோடு சாய்த்திடுவேன்
என் லட்சியம் ஆழமாய் வேர் ஊன்றிட பாடு பட்டிடுவேன்
வெற்றி எனும் கனி பறித்திட பொறுமை காத்திடுவேன்
எல்லாம் நிறைவேறிட என் கனவே உன்னை விதை நுனியில் கண்டேனே